ஆசையோடு காத்திருக்கேன்
-----------------------------------------
ஆசையோடு காத்திருக்கேன்
தந்தானே தானே
உன்னோடு கொஞ்சி விளையாட நினைத்தேன்
தந்தானே தானே
கோவிலுக்கு நானும் வந்தேனே
தாவணி பாவாடை அணிந்து வந்தேனே
என் மாமனே
உனை பார்க்கத்தானே
பொய் சொல்லி நானும் வந்தேனே
மணி கணக்கா காத்திருக்கேன்
உன் நினைவில் வீற்றிருக்கேன்
நேரம் போவதோ தெரியலையே
என் கருத்த மச்சானே
நீ வர தாமதம் ஏனோ
பொழுதும் சாய்ஞ்சி வருகுது
நேரத்தில் வீடு போய் சேரனும்
என்னை காக்க வைப்பதில்
சுகம் என்ன என் மாமனே
நீ ஓடி வருவது தெரியுது
எனை பார்த்து ஏனோ இந்த நடிப்பு மாமாவே
மூனு முடிச்சிய நீ போட்டினா
உன் முக்காடு ஏங்கிட்ட வேகாது
தானே தன்னானே மாமனே
தப்பி எடுப்பேனே என் மச்சானே
மீசையை நீ முறுக்கி விடனும்
வேட்டிய மடிச்சியும் கட்டிடனும்
என் கையை பிடிச்சு அழைச்சி நீ போகனும்
அதுல நான் செவந்து போகனும் என் மாமனே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment