தந்தையின் தாலாட்டு
- - - - - - - - - - - - - - - - - - -
தந்தையின் உதிரத்தின் உருவம்
அவரின் நகலும் நாம் அல்லவோ
தாய் பாலை ஊட்டுவாள்
தந்தையோ அறிவை புகட்டிடுவார்
அம்மா என்றழைத்தவன்
அப்பாவை மதித்திடுவான்
தாயோ அன்பை புகட்டுவாள்
தந்தையோ ஆசானாய் கற்பிப்பார்
அறிவின் ஆதாரம் அவர்
நம் உயர்வுக்கு
தன்னை ஏணிப்படியாக அர்ப்பணிப்பார்
வளர்ச்சியின் ஊன்றுகோள் அவர்
தன் பிள்ளை என்றே
புகழை விரும்பிடுவார்
மகன் தாழ்ந்து போனால்
கூனி குறுகிடுவார்
புதல்வனின் மனம் ஊனமானால்
ஊன்றுகோலாய் மாறிடுவார்
கைப் பிடித்து நடந்திடுவார்
உலகத்தை அறிமுகம் செய்வார்
கால் வலிக்குமே என
தோளில் தூக்கி சுமந்திடுவார்
உயிராய் இருப்பார்
பாசமாய் இருப்பார்
கண்டிப்பை முகத்தில் காட்டுவார்
நல்வழிப்படுத்திட
ஓயாமல் உழைப்பார்
தாய் பத்து மாதமே சுமப்பாள்
தந்தை தன் குடும்பத்தையே
ஆயுள் முழுவதும் சுமந்திடுவார்
தந்தையை இழந்தவனை கேட்டுப்பார்
அருமை தெரியும் அப்பொழுது
முதியோர் இல்லம்
அவருக்கு வேண்டாமே
அவர் இருக்கும் வரை போற்றுவோம்
கடவுளாய் தொழுதிடுவோம்
- ____-_-_-_-_-_-_-____---------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment