மடியில் தவழும் தங்கமே
ஆராரோ ஆரிராரோ
நீ ஏன் பிறந்தாய் பவளமே
ஆராரோ ஆரிராரோ
உலகை ஆள பிறந்த வைரமே
எனை ஆளும் வைடூரியமே
நீ பிறந்ததாலே
நாங்க மகிழ்ந்தோமே
எங்க மாணிக்கமே
உதிரத்தில் விளைந்த முத்துவும் நீதானே
முத்து முத்தாய் சிரிக்கின்றாய்
மழையைப் போல அழுகின்றாய்
ஆராரோ ஆரிராரோ
நீங்கா துயரினிலே
கடவுள் அருளால் பிறந்தவனே எங்க
மனச குளிர வச்சவனே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment