Thursday, 22 June 2017

இது யார் குற்றம்

இது யார் குற்றம்?
- - - - - - - - - - - - - - - - - - -
உன் குற்றமா
என் குற்றமா
யார் செய்த குற்றமோ
காலம் செய்த குற்றமோ
சூழ்நிலையால் விளைந்தக் கேடோ
காதல் என்ற பெயராலே
காமத்தால் விளைந்த கருமமோ
தாலிக் கட்டாமல் குடும்பம் பல நடக்கிறதே
தாய் தந்தை பேச்சை கேட்காமலே
தறிக்கெட்டு திரிந்தப் பிள்ளைகளாலே
தவறுகள் பல நடக்கிறதே
தட்டிக் கேட்க நாதியில்லை
தவறுகள் நடந்தப் பின்னே
வருந்தி என்னப் பயனோ
உங்கள் சிற்றின்பத்திற்கு
பலியாகிறதே பல தெய்வங்கள்
குழந்தையில்லாம் வருந்திடும்
தம்பதியர் பலர்
சிசுவைக் கொன்றிடும்
கல் நெஞ்சங்கள் சிலர்
காமம் செய்த குற்றம்
கொலைகள் பல நடக்கிறதே
குப்பையில் பிணமாய் சிசுக்கள்
தெய்வம் தான் தண்டிக்குமோ
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment