குறை காணும் மனிதர்கள்
------------------------------------------
குறையொன்றும் இல்லை
இறைவன் படைப்பினிலே
நிறைவாகவே படைத்தான் அவன்
நாம் அமைத்த குறைகள் நெஞ்சினிலே
குறை காணும் மனதினிலே
குடியிருந்து என்ன பயனோ
வாழ்ந்து மற்றவரைக் கெடுப்பது ஏனோ !
வாழ்வாங்கு வாழ்ந்தவரைப் பாரடா
அவர் வழியே நீயும் நடந்திடடா
சமூகத்தைத் திருத்த நினைக்கும் மனிதா
குறை காண ஓடுவது ஏனடா
நிறம் மாறிடும் மனிதா
நீ பச்சோந்தி இல்லை உணர்ந்திடடா
பணம் மட்டுமே வாழ்க்கையானால்
குணம் எங்கே போனதடா
பண்பை மறந்த மானிடா
அன்பாய் நீயும் நடந்திடடா
பிழைப்பதற்கு மட்டுமே வாழ்ந்திடாதே
மதிப்பாய் நீயும் வாழ்ந்திடடா
மற்றவர் குறைகளை நோக்காதே
உன் குறைகளை களைந்திட முயன்றிடு
மற்றவரை போல வாழ்ந்திடாதே
தனித்துவம் பெற்றே வாழ்ந்திடு
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment