மூன்றெழுத்து
- - - - - - - - - - - - - - - -
அன்பு என்ற மூன்றெழுத்தை
மறந்து போனது ஏனடா மனிதா
அம்மா என்ற மூன்றெழுத்தில்
பாசத்தை கற்ற மானிடா
அன்பும் பண்பும் மறந்து போனது ஏனடா
ஆறறிவு படைத்தவனே
அன்னையின் வயிற்றில் பிறந்தவனே
ஐந்தறிவு ஜீவனெல்லாம் மிருகமில்லை
மானிடனே நீயும் மிருகமா
கொலை வெறியும் ஏன் உனக்கு வந்ததடா
நீ இறைத்த சோற்றுப் பருக்கையை
உண்டதாலே
செய்நன்றியை மறந்திடாது
நாய் கூட உன்னைக் கண்டால் வாலை ஆட்டும்
நீயோ பெற்ற கடனை மறந்தாய்
இயந்திரமாய் வாழ்கிறாய்
வாழ்ந்தென்ன பயன்
உன்னைப் போற்றுவார் இல்லையே
தூற்றுவாரே அதிகம்
குரங்கு மனதுடன் வாழ்கிறாய்
குணத்தை மறந்து போனதாலே
அன்பின் மணம் மறந்ததோ
ஆணவம் உனக்கு அடையாளமில்லை
அன்பின் அடையாளமாய் நீ இருந்துவிடு
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
- - - - - - - - - - - - - - - -
அன்பு என்ற மூன்றெழுத்தை
மறந்து போனது ஏனடா மனிதா
அம்மா என்ற மூன்றெழுத்தில்
பாசத்தை கற்ற மானிடா
அன்பும் பண்பும் மறந்து போனது ஏனடா
ஆறறிவு படைத்தவனே
அன்னையின் வயிற்றில் பிறந்தவனே
ஐந்தறிவு ஜீவனெல்லாம் மிருகமில்லை
மானிடனே நீயும் மிருகமா
கொலை வெறியும் ஏன் உனக்கு வந்ததடா
நீ இறைத்த சோற்றுப் பருக்கையை
உண்டதாலே
செய்நன்றியை மறந்திடாது
நாய் கூட உன்னைக் கண்டால் வாலை ஆட்டும்
நீயோ பெற்ற கடனை மறந்தாய்
இயந்திரமாய் வாழ்கிறாய்
வாழ்ந்தென்ன பயன்
உன்னைப் போற்றுவார் இல்லையே
தூற்றுவாரே அதிகம்
குரங்கு மனதுடன் வாழ்கிறாய்
குணத்தை மறந்து போனதாலே
அன்பின் மணம் மறந்ததோ
ஆணவம் உனக்கு அடையாளமில்லை
அன்பின் அடையாளமாய் நீ இருந்துவிடு
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment