நல்ல மனம் வாழ்க
- - - - - - - - - - - - - - - - - - - -
எனக்கென்ன என்று வாழ்ந்திடாதே
மதித்து வாழ்ந்திட கற்றுக் கொள்
கற்கவே பிறந்திட்டோம்
எல்லாம் தெரியும் என்று எண்ணிடாதே
மூக்குடைந்து போகும்
மேதாவியாய் நீயும் நடந்திடாதே
தவறும் போது முட்டாளாய் அறியப்படுவாய்
அறிவு ஜீவியாக நினைத்திடாதே
அறிவிலிகளால் பற்கள் உடைபடும்
கோபம் கொண்டிடாதே
உறவுகளை இழந்திடுவாய்
அன்பாய் பழக கற்றுக் கொள்
தூற்றிய உலகமும் மதித்திடும்
நல்ல மனதுடன் திரிந்திடு
புறஞ்சொற்கள் பேசாதே
புறமுதுகிட்டு ஓடாதே
தீயவற்றை எண்ணாதே
தீயாய் நீயும் கருகாதே
பொறாமை கொள்ளாதே
பொங்கியும் வழிந்திடாதே
உதவிகள் செய்திடு
செய்த உதவிகளை கூறிடாதே
உதவியாற்ற முடியாவிட்டாலும்
தீவினைகள் செய்யாதே
எள்ளளவு உதவிடு
கடலளவு உயர்ந்திடுவாய்
செய் நன்றியை மறவாதே
நல்லவர்களுடன் பழகிவிடு
நல்லது செய்தே வாழ்ந்து விடு
நல்ல மனம் வாழ்கவென்று
உலகம் உள்ளவரை போற்றட்டும்
தூற்றிய உலகம் வாழ்த்தட்டும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment