Thursday, 22 June 2017

முத்து முத்து சிரிப்பழகா

முத்து முத்து சிரிப்பழகா
முல்லைப் பூ பல்லழகா
_________-___________
ஆராரோ ஆரிராரோ
தாலாலே லாலிலிலோ

முத்து முத்து சிரிப்பழகா
முல்லைப் பூ பல்லழகா
சிரித்துப் பேசும் முத்தழகா
அழகு நிறைந்த ஆணழகா

ஊஞ்சல் தாலாட்டு நான் பாடிடுவேன்
நிம்மதியாய் நீ உறங்கு கண்ணே
ஆத்தா நான் பாடுகின்றேன்
கானா நான் மீட்கின்றேன்

தவம் செய்து நான் காத்திருந்தேன்
தவ புதல்வா நீ பிறந்தாயே
பூமணம் வீசும் பூவரசனே
பூங்காவனமாய் திகழ்பவனே

பொங்கி வருது ஆனந்த  கண்ணீரு
அத துடைக்க நீயும் வந்தாயோ
குலதெய்வமாய் நீ வந்தாயே
தாய்மை பதவியை கொடுத்தாயே

ஆறுதலா நான் பாடுகின்றேன்
அன்பையும் பொழிகின்றேன்
ஆராரோ ஆரிராரோ
உன்னை அடித்தது யார் யாரோ
அவங்களை அடித்திடுவேன் நீ  பாரோ

ஏழை குடிசையில் நீ பிறந்திட்டாய்
ரதத்தில் தாலாட்டும் பாக்கியம்
எனக்குக் கிடைக்கலையே
ஊஞ்சல் கட்டி தாலாட்டினேன்
கண்ணயர்ந்து தூங்கிடுவாயோ

ஆராரோ ஆரிராரோ
ராரிரோ ராராரோ
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment