Thursday, 22 June 2017

வேலையில்லா பட்டங்கள் எதற்கு வீழ்த்திட வா

வேலையில்லா பட்டங்கள் எதற்கு
வீழ்த்திடவா - - - - - - - - - - - - - - - -
- - - - மாடு மேய்க்கலாம்
------------------------------------------------
வேலையில்லா பட்டங்கள் எதற்கு
வீழ்த்திடவா
பாதாள குழியிலே தள்ளிடவா
ஆயிரம் படிப்புகள் உண்டிங்கே
பட்டம் வாங்கியே
வேலையில்லாமல் அலைபவர்களோ
பலகோடி
தகுதிக்கு மதிப்பில்லை
படிப்புக்கும் மரியாதை இல்லை
வேலைக்கும் ஆட்கள் தேவையில்லை
எல்லாம் இயந்திர மையம்
பெயருக்கு படித்தவன்
அவனோ வேலையின்றி தவிக்க
பணவெறி பிடித்த முதலைகள்
கல்லூரிகள் பலவற்றைக் கட்டியே
பட்டங்களை வாரி வழங்க
எண்ணிக்கை மட்டுமே பெருகுகிறது
வேலை மட்டும் கானல் நீராகிறது
படித்த பட்டங்கள் அறையில் தூங்க
உணவுக்கே வழியில்லை படித்ததாலே
வங்கிக் கடனையும் கட்டவில்லை
படித்தென்ன பயன்
படிக்காதவன் உழைத்து வாழ்கிறான்
பட்டம் பெற்றவன் பட்டத்தை
கையில் ஏந்தியே வேலைக் கேட்டு திரிகிறான்
வாழமுடியாத பட்டம் பெற்று என்ன பயன்
அதனை நினைப்பதிலும் மாடு மேய்க்கலாம்
___________________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்



No comments:

Post a Comment