Sunday, 18 June 2017

விதைகள்

விருட்சம் கொண்ட விதைகள்
விடியலின்றி வாழாது
விருந்தோம்பிய தமிழர்கள்
விரும்பியே ஈன்றிடுவார்கள்
விதைகள் விளைந்தால் விருட்சமாகும்
தமிழரின் பண்பாடாய் தழைத்தோங்கும்
உயிர்கள் பல வாழ்ந்திடும்
உலகமே போற்றிடும்
விடியலைத் தாங்கி வளரும்
விலை மட்டும் போகாது
விண்ணைத் தாண்டி வளரும்
விண்ணுக்கும்  மண்ணுக்கும் பாலமாகும்
விருந்தோம்பல் சால சிறந்தது
பாரம்பரியம் பார்க்க பழையது
பண்பாடு அதனுடன் கலந்தது
பரிசுத்தமான அன்பால் உருவானது
உண்ண உணவு கொடுப்பது
இறைவன் கொடுத்த வரம்
உணவின்றி கையேந்துவது
கடவுள் கொடுத்த சாபமில்லை
நீ செய்த பாவத்தின் வினை
உலகின் சிறந்த மொழி எம்மொழி
சிறந்த மனிதர்கள் எங்கள் குலத்தினர்
தமிழனாய் பிறந்திட தவம் செய்திட வேண்டுமே
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment