கருவறையின் இரகசியம்
----------------------------------------
ஈருடல் ஓருடலாகி
பெண்ணின் கருவில்
விந்தாய் ஊன்றி
வித்தாய் வளர்ந்ததே
உணவு, தண்ணீர் இன்றியே
தாயின் ரத்தமே உணவாய்
தொப்புள் கொடியின் வழியாய்
பத்து மாதங்கள் இருட்டறையில்
உயிரொன்று வாழ்ந்திடுமே
தெய்வத்தின் ரகசியமான கருவறையிலே
________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment