புளியந்தோப்பில் ஒரு நாள்
______________________________
புளியந்தோப்பில் ஒரு நாள்
நான் நின்றிருந்தேன்
தாவணிப் போட்ட சின்னப் பொண்ணு
ஒருத்தி பக்கத்தில் வந்தாளே
நடுக்கமோ எனக்கெடுத்தது
வியர்வையால் முகம் நனைந்தது
தாவணி முந்தானையாலே
முகத்தை துடைத்தாளே
கண் சிமிட்டி சென்றாளே
என்னுடல் மட்டும் அங்கே நின்றிருக்க
என்னுயிரோ அவள் பின்னாள் செல்கிறதே
உறவாட வந்தவளே
மனதை களவாடி சென்றாயே
என்னை திரும்பி திரும்பி பார்க்கின்றாய்
மனதில் ஏதோ செய்கிறது
புளியந்தோப்பில் அனலாய் தகிக்க
உடலும் வெம்மையால் வேகிறதே
அவள் நினைவாளே
என் நெஞ்சமும் தடுமாறியதே
காதல் என்னிடம்
கள்ளாட்டம் ஆடியதே
_________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Thursday, 22 June 2017
புளியந்தோப்பில் ஒரு நாள் நின்றிருந்தேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment