Sunday, 18 June 2017

புது மலரே

புத்தாடை அணிந்தே
புது மலராய்  வருகிறாள்
அவளை பார்த்த அந்த நொடியே
புத்தாண்டின் தொடக்கம் எனக்கு
கண்களின் காட்சிக்கு மலரவள்
மனதின் கனவுக்கு தேன் அவள்

மழையோ பொழியவில்லை
வெப்பமோ குறையவில்லை
நீ வந்த நேரமடி
எனக்கு மட்டும் மழை பொழியுதடி
குளிர் காற்று இதமாய் வீசுதடி

மயில் போல வந்தாயே
குயில் போல இசைத்தாயே
மான் போல துள்ளினாயே
என் மனதை பிரமிக்க வைத்தாயே

இடையில் என்ன
உடையின் மாற்றம்
மனதில் தெரியும்
இளமையின் சீற்றம்
இளமைகள் கூட்டு சேர
முதுமைகள் அடித்தளம் அமைக்க
மலரும் வண்டும்
இணையும் நேரம்
தேன் சிந்தும் பனி மழைக்காலம்
என்னை தேடுகிறாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வருகிறாள்
___________
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment