Thursday, 22 June 2017

ஈ முதலெழுத்துக் கவிதை

ஈ முதலெழுத்துக் கவிதை
- - - - - - - - - - - - - - - - - - - - - -
ஈகை மனம் வேண்டும் உதவிகள்
ஈன்றிட தவம் செய்திட வேண்டாமே
ஈரம் நெஞ்சம் அன்பை ஆளும்
ஈனப் பிறவிகள் ஒழிய இன்னல்கள் அகல
ஈர்ப்பு தானாய் வரும் கவிதையில்
ஈசன் அருள்வான்  கேட்காமல் வழங்குவான்
ஈரலை உருவிட ஈரிசை பிறந்திட
ஈதை ( துன்பம்) அகன்றிடும் உள்ளம் - குளிர்ந்திடும்
____________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment