Thursday, 22 June 2017

கலையாத கனவுகள்

கலைந்த காதலின்
கலையாத கனவுகள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
இளஞ்சிட்டுக்கள் இரண்டு இணைந்ததே
கானாப் பாடி சென்றதே
ஊர் உலகம் சுற்றியதே
உறவாய் கூடியே
உண்மை நேசம் காட்டியதே
ஊர் மெச்சவே
வாழ்ந்த மலர்கள்
யார் கண் பட்டதோ
மனம் இரண்டும்
பட்டமரம் ஆனதே
என்றும் பிரியாத புறாக்கள் போலே
கூடி திரிந்த காலங்கள் எங்கே
பட்ட மனம் பசுமை பூக்குமோ
வசந்தம் மலருமோ
கலைந்த காதல் அரும்புமோ
கனவுகள் கலைந்ததே
நினைவுகள் திரும்புமோ
தண்ணீரில் இட்ட கோலமாய்
காதல்தான் அழிந்ததே
நீரில் மலர்ந்த செந்தாமரையாய்
காதல் பூக்குமோ
கவிதைகள் கொட்டுமோ
காதல் என்னவோ கலைந்தது
கனவுகள் மட்டும் கலையவில்லையே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment