முத்து முத்து சிரிப்பழகா முல்லைப் பூ பல்லழகா
_________-___________
முத்து முத்து சிரிப்பகா முல்லைப் பூ பல்லழகா மோகம் கொண்ட முத்தழகா காதல் கொண்ட ஆணழகா
கருத்துப் போன கருப்பழகா
காதல் சொல்ல வந்த கண்ணழகா
வந்த வழியே போறியே
காணாம ஏன் சென்றாயோ கண்ணம்மா நான் காத்திருக்கேன் களத்து மேட்டுல குடியிருக்கேன் பூமணம் வீசும் பூவரசனே
பூங்காவனத்த பார்க்காம ஏன் போறாயோ
பொங்கி வருது கண்ணீரு அத துடைக்க இங்கே யாரு
வந்த வழியே போன மச்சான்
உன் கண் பட்டா போதும் மச்சான் ஆறுதலா வந்து பேசிடு மாமா
கழுத்துல மாலைய மாட்டிடு மாமா பருவம் வந்து பல நாளாச்சு
தாலிய நீயும் கட்டிடு மாமா
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன் இல.வீரபாண்டியன்
Thursday, 22 June 2017
முத்து முத்து சிரிப்பழகா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment