விவசாயி
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நாங்கள் உழைத்தே வாழ்ந்தோம்
உழைக்காமல் இருக்க முடியவில்லையே
வயது முதிர்ந்தது
உடல்தான் தளர்ந்தது
ஆரோக்கியம் குறையவில்லை
களத்து மேட்டிலே
விவசாயம் செய்கின்றோம்
களையும் எடுக்கின்றோம்
வியர்வைத் துளிகள் வழிந்திடும்
எங்கள் இன்னல்கள் பறந்துவிடும்
நாங்கள் உழைப்பதாலே
நீங்கள் சுகவாசி ஆனீர்கள்
சுகபோகம் எங்களுக்கு வேண்டாமே
உழைப்பே எங்களுக்கு சுகமாகும்
பட்டம் பெற்று பயனேது
வேளாண்மை பட்டம் பெற்றிடு
தலைமுறைகள் வாழ்த்தும் பட்டமது
விவசாயி என்ற பெயரை வாங்கிவிடு
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Sunday, 18 June 2017
விவசாயி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment