Sunday, 18 June 2017

எள்ளும், கொள்ளும்

எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்கிறது
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
எள்ளும் கொள்ளும்
முகத்தில் வெடிக்கிறது
ஏழையாய் பிறந்ததாலே
வறுமையும் வாட்டுகிறது
காட்சி கண்ணில் தெரிகிறது
ஏக்கமோ மனதில் கரைகிறது
கானம் பாடிட மனம் நினைக்கிறது

காட்சியைத் தேடி நெஞ்சம் அலைகிறது
தண்ணீரைத் தேடி
மீன் செல்கிறது
மீனைத் தேடியே
கொக்கும் ஒற்றைக் காலிலே நிற்கிறது
புல்லை தேடியது மான் - அந்த
மானை தேடுகிறது புலி

நாமோ உணவைத் தேடுகிறோம்
நம் மனதோ
இனிமையை நாடுகிறது
மது, மாதுவை நினைக்கிறது
தேடுதலே வாழ்க்கையின்
வேட்டையாய் நடக்கிறது
தேடியும் கிடைக்கவில்லை
மனம் அடங்க மறுக்கிறது

கிடைப்பதை தடுக்கும் போதே
கோபமும் முளை விடுகிறது
அத்துமீறும் போதே
தவறுகள் நடக்கிறது
நீதி தவறும் போதே
கண்ணியம் தவறுகிறது
கடமை தவறும் போதே
கட்டுப்பாடு அவிழ்ந்து போகிறது
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - .. ----
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment