பூவோடு பூவாகி மலர்ந்தாளோ பூவையிவள்
= === = = = = = = = = = = = = = = = =
என்னவள் மலரல்லவோ,
பூவோடு பூவாகி மலர்ந்தாளோ பூவையிவள்,
பூந்தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்
யார் அழகென்று,
இவளுடன் போட்டியிடுகின்றன!
மலர்கள் தினமும் மலர்ந்து உதிர்ந்துவிடுகின்றன,
என் பாவையிவள் ஒரு முறை மலர்ந்து
தினம் தினம் அழகுக்கே சவால் விடுக்கின்றாள்!
குறிஞ்சி மலர் மலர்வது மகாமகத்திற்கு ஒரு முறைதானே,
என் இனியவளோ தினமும் மலர்ந்து அதிசயிக்க வைக்கின்றாள்!
சாமந்தி மலர்ந்தால் மஞ்சளாக காட்சித் தரும், பூத்து உதிரும்,
என்னவள் தினம் தினம் மஞ்சள் பூசி சாமந்தியாக மலர்ந்து விடுகிறாள்,
ரோசா மலர் மலரலாம்,
மணக்கலாம், மருந்தாகலாம், திரவியமாகலாம்,
என்னவள் தினம் தினம் மணம் வீசி மருந்தாகிறாள், சோம்பலைத் துரத்தி விடுகின்றாள்,
எந்த மலர்களும், உன் மலர்ச்சிக்கும், மணத்திற்கும் ஈடாகவில்லை,
நீயோ மலர்களை நாடுகிறாய்,
என் மனமோ உன்னையே நாடுகிறது!
= = = = = = = = = =
வீரா
No comments:
Post a Comment