வீடு அதனை நாடு
நாடு அது என் பாடு
காடு தான் இப்போ எம் வீடு
மலை தான் எம் கோட்டை
எதிரிகளின் குண்டு மழை சத்தம்
நம் வீட்டை கடக்காமல் தடுக்க
எம் உயிர் அலைகிறது
காட்டிலும், மேட்டிலும்
ரத்தம் சிந்த,
கால் போய், கைபோய்
சதை பிண்டமாக,
குற்றுயிராய், குலை உயிராய்
நம் வீட்டை காக்க
யாம் படும் பாடு பாரு,
திக்கெட்டும் பனிமலை,
சரிந்தால் சிதை கூட மிஞ்சாது,
கண் அயர்ந்தால்,
எதிரிபடைகள் நாட்டை சூழும்,
பாம்பு, பல்லி, அட்டை
உடலில் ஊர்ந்து ஓட
அசையாமல் சதை பிண்டமாக கிடந்து
இலை தழையால் சிதையை மறைத்து
நம் குலம் காக்க்கின்றோம்,
குடும்பத்தை மறந்து,
புள்ளய பிரிந்து, குட்டிய மறந்து
நாடு நலனே முக்கியம் என்று
நம் கொடி பறக்க காக்கின்றோம்,
என்றோ விடுப்பில் வீடு திரும்ப
உடனே வரும் உத்தரவால்
மீண்டும் வருவேனோ
என பிரியா விடை கொடுத்து
மசக்கை மனைவியின் கையை விடுத்து
போருக்கு சென்று
வீர மரணம் அடைகின்றோம்.
உடல் தான் வீட்டுக்கு,
உயிர் நாட்டுக்கு,
வெற்றி தேசத்திற்கு,
சல்யூட் இந்தியாவுக்கு!
No comments:
Post a Comment