Wednesday, 13 November 2019

தூரலே என்னை துவட்டிவிடு

தூரலே என்னை துவட்டிவிடு,
தூரமாய் செல்லாதே
என்னை அணைத்துவிடு,
நெருங்கி வருகிறேன்
நீ வெட்கத்தை விடு!

நீ செல்லும் பாதையில் தொடர்கிறேன்,
பூத்த மலர்கள் என்னை அழைக்கிறது,
உன் கடைக்கண் பார்வை
என் மீது படாமல் செல்கிறது.
உன் காதல் தூரலை என் மீது வீசிவிடு

உன் அழகில் மயங்கியதால்
நான் செல்லும் பாதை மறைந்தது,
உன் காலடி தடத்தில் நடக்கிறேன்,
என் தடமாக நீ மாறிவிடு!

முகத்தை மறைத்து சிரிக்கும் தேவதையே,
உன்னை தொடர்வது தான் உனக்கு சொர்க்கம் எனில்
அதில் பயணிக்க நான் தயார்,
என்னை தூரலால்  துவட்டிவிடு!

நதிக்கு எல்லை உண்டு,
காட்டிற்கும் வரையறை உண்டு,
என் காதலுக்கு நீதானே எல்லை,
உன் காதலால்
சாரலாய் வந்து நனைத்துவிடு!

No comments:

Post a Comment