நினைவுகளின் நெடுஞ்சாலை
- - - - - - - - - - - - - -
நினைவாய் வந்தாய்
கனவாய் ஆனாய்
நிழலாய் தொடர்கிறேன்,
நிலவாய் ஆராதிக்கின்றேன்,
நெஞ்சில் குடியேறினாய்
நனவாய் ஆனாய்
நான் நாணல் ஆகின்றேன்.
உன்னை சுற்றி சுழல்கின்றேன்.
இதயத்தை சிறைபிடித்தாய்,
குருதியாய் ஆனாய்,
நான் ஓடிய ஒட்டத்தில்
என் மூச்சு அறைகளை அடைத்தாய்.
என் சுவாசத்தை ஆட்கொண்டாய்,
என் உயிரானாய்,
நான் சதையானேன்,
என் நினைவுகளின்
நெடுஞ்சாலையில் பறந்து விரிகிறாய்,
நான் படுத்து உறங்குகிறேன்.
- - - - - - - - - - - - - -
வீரா
No comments:
Post a Comment