வயலும் வசந்தமும்:
ஆத்தங்கரை ஓரத்திலே
அரை வீசம் வயலிருக்க
மழை பெஞ்சதோ, பெய்யலையோ
ஊத்து மட்டும் இருக்குதைய்யா!
ஊத்து தண்ணியில
ஏரு ஓட்டி, சேரடிச்சி
நாத்து விட்டு நடவு நட்டு
பச்சையமும் பிடிச்சிருச்சி,
வசந்தம் தான் வந்ததைய்யா!
நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமுன்னு
வந்ததய்யா புது நோவு
அதுக்கு மருந்தும் இங்கே இல்லைன்னு
கையத்தான் விருச்சிட்டாங்க,
பாட்டன், முப்பாட்டன் செய்த
விவசாயத்தை நான் நெனைச்சேன்,
வேப்பம் புண்ணாக்கு, மணலோட கலந்து
சகட்டுக்கும் தூவி புட்டேன்
வந்த நோவு காணலையே,
என் வயலுக்கு
வசந்தம் தான் வந்ததைய்யா,
அட காற்று மழை வந்திடுச்சி
வெள்ளாம நெருங்கையில
வெள்ளம் வந்தா என்ன செய்வேன்,
மாரியாத்தா, காளியாத்தா
துணையிருக்க வேணுமுன்னு,
ஆடி மாசத்துல, கஞ்சி ஊத்துறேன்னு
நானும் நேர்ந்துக்கிட்டேன்.
அந்த ஆத்தா துணையிருக்க
வெள்ளாம வௌஞ்சி,
என் வயிறு நெறஞ்சிட,
அட என் வாழ்வும் வசந்தமானதய்யா!
No comments:
Post a Comment