தோல்விகள் வரும் கலங்கி விடாதே, அது நிலையென நினைத்து கவலைப் படாதே,
அது தொடர்வது உனக்கு ஒர் அனுபவம்,
வருவதும் போவதும் அதன் வாடிக்கை,
முயற்சி என்பதே உன் கையில் இருக்கும் அம்பு,
அதனை குறி பார்த்து எய்வதில் இருக்கிறது உனது திறமை,
அம்பும் திறமையும் சேர்ந்தால்
வெற்றி வசப்படும் உனக்கு!
அம்பு குறி தவறினால் அது உனக்கு ஒர் பாடம்,
அது இலக்கை எட்டினால் அதுவே வெற்றி!
ஆயிரம் அம்புகள் தவறினாலும்,
உன் முயற்சியை தளர விடாதே,
அதுவே வெற்றியை பறிக்கும் ஆயுதம்
என்பதை நீயும் மறந்து விடாதே!
_______________
வீரா
No comments:
Post a Comment