Tuesday, 12 November 2019

சிரிப்பும் அழுகையும்

சிரிப்பும் அழுகையும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -

வாழ்க்கை ஒரு நாடக மேடை
அதில் நடிக்கும் நடிகர்கள் நாம்.
தொடரில் வரும் வில்லன்கள் போல் சிலர்
நல்லவர்களாய் பலர்,
அது நம் சுற்றத்தின் வினை!

மற்றவரை புகழ்வதும்,
இகழ்வதும் நம் வேலை.
ஒருவன் அழிவதும், தாழ்வதும், உயர்வதும்,
நம்முடன் பழகும் நட்பின் வினையே!

அவன் சிரிப்பது முகத்தில் மட்டுமே
உள்ளத்தில் அழுகின்றான்,
அவன் அழுதால் உள்ளத்தால் சிரிக்கின்றான்,
அழுவதும், சிரிப்பதும் அவன் ஏற்ற கதாபாத்திரத்தின் வினை!

மற்றவரை மகிழ்விக்கும் சிரிப்பில் ஆயிரம் துன்பங்கள் மறைந்திருக்கும்,
அவன் அழுகையில் ஆயிரம் அர்த்தங்கள் மறைந்திருக்கும்.
அது அவன் தர்மத்தின் வினை!
--------------
வீரா

No comments:

Post a Comment