Tuesday, 5 November 2019

நரகம் தேடி நகரம் போகும் மனித உறவே

நரகம் தேடி நகரம் போகும் மனித உறவே
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

நரகம் தேடி நகரம் போகும் மனித உறவே
நீ தெரிந்தும் தெரியாமலும் செய்யப்போகும் தவறே!
கீரையைத் தான் காசு கொடுத்து வாங்க வேண்டுமே,
அட தண்ணீர்கூட கிடைக்காமல் திண்டாட வேண்டுமே,
நச்சுப்புகை நாசியில் ஏறி
நச்சரிக்குமே,
நீரிழிவும், ரத்த அழுத்தமும் உடலில் தேங்குமே!

நெல்லை அவித்து குத்தரிசி எடுத்த காலம் போனதே,
நல்ல உடலும் வனப்பும் அதனோடு சேர்ந்து போனதே.
சாக்கு மூட்டையில் அடைத்த அரிசி இங்கே சக்கையாய் மாறிப்போனதே,
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு சுவை இல்லாமல் போனதே.

ஒதுங்க கூட மரம் இல்லை என்ன செய்வதோ,
நல்ல காற்று கூட பையில் அடைத்து விற்க்கும் காலம் வந்ததோ,
நடை நடையாய் நடந்து சென்றோம்,
எந்த நோயும் அண்டவில்லையே,
ஓடியாடி உண்டு களித்தோம்,
உடல் எடையும் கூடவில்லையே!

நரகம் தேடி நகரம் சென்றோம்
சொகுசு வாழ்வு கிடைத்தது என்றோம்.
நல்ல காற்றை சுவாசிக்க மறந்தோம்
விரைவு உணவால் உடலை இழந்தோம்.

நோகாமல் நுங்கு எடுத்தோம்,
நோய்நாடி நாமும் சென்றோம்.
சம்பாதித்ததை வைத்தியரிடம் கொடுத்தோம்,
நிம்மதியை இழந்து தவியாய் தவிக்கின்றோம்!
உடல் பிணயாகி வலியாகி ரணமாகி
நரகத்தின் வேதனைதனை அனுபவித்தோம்.

நல வாழ்வு பெற வேண்டும்.
நோய் நீங்கி வாழ வேண்டும்.
நகரத்தை விடுக்க வேண்டும், சொர்க்கத்தை தேடி ஓடவேண்டும்.
நல்ல உணவை உண்ண வேண்டும்.
அதற்கே கிராமத்தில் வாசம் செய்ய வேண்டும்.
-------------
அன்புடன் வீரா







No comments:

Post a Comment