வண்டி சத்தம் கேட்கையில
மச்சான் நீயூம் வந்துட்டியோ,
ஒடி வந்து பாக்குறேனே
உறவு விட்டு போய்விடுமோ
உன் பேச்சு சத்தம் கேட்கையில
என் மனமும் படபடக்கையில
நீ கண்டும் காணாம போகையில
பாசம் எங்கே போய் விடுமோ
மாட்டு வண்டி சத்தம் கடகடக்கையிலே
நான் வழி மேல விழி வைத்து
சந்துல சிந்து பாடிக் கிட்டு
உன் கடக்கண் பார்வை கிடைத்திடுமோ
உன் அன்பும் மறைந்து போய் விடுமோ
உன் சிரிப்பு சத்தம் கேட்கையில
நான் ஏங்கும் பார்வைய நீ பார்க்கலையோ,
நான் தவிக்கும் தவிப்பு என்னோட எரிந்திடுமோ
இல்லை உன் முத்தத்தால் அணைந்திடுமோ,
உன் சத்தத்தில் உயிர் வாழ்ந்தேன்,
நம் பிரிவு என்னை கொன்றிடுமோ,
நாம சேர வழியிருக்க
உன் மனம் தான் இடந்தருமோ,
காத்திருக்கேன், காத்திருக்கேன்
உன் மல்லிகையாய் மலர்ந்திருக்கேன்
வாடா மல்லி அழைக்கின்றேன்
பறித்திட, அணைத்திட வந்திடு மச்சான்.
- - - - - - - - - - - - - - -
அன்புடன் வீரா
No comments:
Post a Comment