Tuesday, 5 November 2019

காட்டு மல்லி பூத்திருக்கு _ கிராமிய கவிதை

காட்டு மல்லி பூத்திருக்கு
பறிக்கவா என்  மாமனே,
நான் ஒருத்தி இருக்கையில
நீ கூடு விட்டு பாய்ஞ்சது போதும்
கூடாரம் போகலாமா என் மச்சானே,

கூவிளங்காய், மாவிளங்காய்
சாப்பிட வேணும் நானுமே,
தெம்மாங்காய் நீயும்
தேமாங்காய் பறித்து தர வேணுமே

கொண்டையில மல்லியத்தான்
நிறைய வச்சிருக்கேன் நானுமே
வாசனையில கிரங்கி போவ நீயுமே
தெவிட்டாம நானும்,
மாங்காய சாப்பிடத் தான் வேணுமே,

நினைச்சி நினைச்சி உருகிதான் போறேனே,
என் நினைவில்  நீங்காம
நீங்க நிலைச்சிருக்க வேணுமே,
அதுக்கு நீங்க தாலியத் தான்
கட்டவேணும் என் மாமனே,

நான் சமைஞ்ச போது,
சந்தோஷப்பட்ட மச்சானே,
வெள்ளாம கேக்குறேன்
நீங்க விளைச்சிப் புட்டு போங்க,
நாளு நேரம் பார்த்தாக்க
வறண்டுத்தான் போய் விடுமே,

தண்ணிய பாய்ச்சித்தான்,
தாகத்த தணிச்சி விடு என்னவனே,
வெள்ளாம வெளைஞ்சிடும்,
என் குறை தீர்ந்திடும்,
என் நெஞ்சில் குடியேறிட
காட்டு மல்லி நான் காத்திருக்கேன்
பறித்திடத் தான் வாயேன்
என் மச்சானே!
- - - - - - - - -
வீரா

No comments:

Post a Comment