Monday, 18 November 2019

அடிக்கும் அலையே நம் தோழன் (கிராமியம்)

அடிக்கும் அலையே நம் தோழன்
= = = = = = = = = = = = = = = = = = = =
அடிக்கும் அலையே நம் தோழன்,
எதிர்க்கும் காற்றே நம் நண்பன்
புயலும், மழையும் நமக்கு உறவுகள்,
எதிர் நீச்சலே நம் வாழ்க்கை,

ஐலசா போட்டு படகில் செல்லும்
மீனவன் வாழ்க்கை கேள்விக் குறியோ, கொடூர திமிங்கிலமும்,
ஆளை விழுங்கும் சுராவும்
மீனவனுக்கு நண்பனாம்,
மனித இனமே அவனுக்கு எதிரியாம்,

அள்ளிக் கொடுக்கும் கடல் தாயி
வாரி அணைக்கிறாள்,
சூறாவளிக் காற்றும்,
சுழன்றடிக்கும் அலையும்
தெறித்து ஓடுகிறது,

எல்லைத் தாண்டியது குற்றமென
சுட்டுத் தள்ளுகிறான்,
மீனவன் செத்து மிதக்கிறான்,
சீற்றம் கொண்ட கடலும்,
சினம் கொண்ட இயற்கையும் ,
மீனவனுக்கு தாய் மடியாம்,
மனிதனுக்கு மனிதன் வீழ்த்த துடிக்கிறான்,
மனிதம் மாயையில் வீழ்ந்தது.

இயற்கைக் கூட உதவிடும்,
மனித மிருகமோ கொன்றுவிடும்,
நேயத்தை தின்றுவிடும்,
அடிக்கும் அலையாய் மாறிவிடு,
உற்ற தோழனாய் உதவிடு!
- - - - - - - - - - - _
வீரா

No comments:

Post a Comment