Tuesday, 5 November 2019

கனா கண்டேனடி தோழி

கனா கண்டேனடி தோழி
என் தோழன கண்டேனடி
அந்த கதைய எடுத்து விடட்டுமா
பாட்டா நானும் படிக்கட்டுமா

தந்தி அடிச்ச கதை இருக்கு,
கடிதம் வழியே கவிதை அனுப்பிய நாட்கள் இருக்கு,
வாட்சப் பேசி சரணம் படிச்ச நேரம்
பேஸ்புக்கில்  ஸ்டேட்டஸ் பார்த்து நாணம் நானும் கொண்டேனடி

ட்வீட்டரில் ட்வீட்டடிச்சி,
மெசேஞ்சரில் முகம் பார்த்து
ஹலோவில் கலாய்த்து
டிக் டாக்கில் தாலி கட்டிய
காதல் எங்கள் காதலடி

மணிகணக்கில் செல்போன் பேச்சு,
நேரம் தான் எங்கே போச்சு
பகல் இரவாக, இரவு பகலாக
இரண்டு மனமும் சங்கமிக்க
இந்த பிறவியே என் கண்ணனுக்காக நொடியில் பொழுதுகள் மாறியதடி,

தினம் தினம் நெருக்கம் தீயாக
காதல் தீ, மோக தீயாகி
ஊடலும், கூடலும் கலந்தேற
கட்டில் அரங்கேற்றம் நிகழ
காமனின் பாணத்தில் வீழ்ந்தேனடி

No comments:

Post a Comment