Tuesday, 26 November 2019

ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே
= = = = = = = = = =
ஞாபகம் வருதே,
மழலையில் செய்த குரும்புகள்,
அம்மாவின்
செல்ல அதட்டல்கள்,
அப்பாவின் மிரட்டல்கள்,
நினைவில் வருதே!

ஓடி ஆடியக் காலங்கள்,
கோட்டிப்புல் அடித்து
அடிக் கணக்கை அளந்து,,
காயே கருப்பங்காய் பாடியப் படியே
ஆடிய கல்லாட்டங்கள்,
ஞாபகத்தில் உதிர்கிறதே!

தண்ணீர் நிரம்பிய
கண்மாய்களில்,
போட்ட ஆட்டங்கள்
நட்புகளின் கூட்டங்கள்,
நினைவை வருடுகிறதே!

மாசிமகத்தைக் காண
மக்கள் கூட்டத்தில்
சிக்கி,
விளையாட்டுப் பொம்மைகளை
வாங்க முடியாமல்
ஏமாற்றத்துடன் திரும்பிய
தருணங்கள் கனவாகியதே!

தொடுதிரையே நேரத்தை
விழுங்கையில்,
மீண்டும் இளமையோ
திரும்பாது!
கடந்ததை ஞாபகப்படுத்தினால்
இன்பங்களும்,
துன்பங்களும்,
மனதில் தோன்றி
மறைகிறதே!
= = = = = = = =
வீரா

No comments:

Post a Comment