சின்னக் கண்ணுப்
பொன்னுத்தாயி
கலைமணியே நீ பிறந்த நேரம்
நான் மலடி பட்டம் இழந்தேன் கண்ணே
முழு பெண்ணாய் உணர வைத்து
மகிழ்ச்சியில் ஆழ்த்திய என் சின்னக் கண்ணே
ஆராரோ என்னை பாட வைத்த
ஆரிய மாதாவே,
ஆரிராரோ என்று என்னை தூங்க வைத்த அம்மணியே
பொன்னுத்தாயி பெத்த சின்னக் கண்ணு நீயே
அடம் பிடிச்சி அழுதா,
அப்பன் வைவாறு தாயே,
நீ களுக்கென்று சிரிச்சாக்கா
பச்சரிசி தெறித்து விழும்,
கண்ணீர் விட்டு அழுதாக்க
முத்து மணியாய் தண்ணீர் விழும்,
ஓடி ஆடி விளையாடும் அழகோ
பச்சம் பசும் சோலையும் தோற்கும்,
நீ புத்தம் புது துணி போட்டா
அந்த அம்மனும், உன்னை தூக்கி வச்சு கொஞ்சும்!
முத்து முத்தா பேசும்
மழலை கண்ணே,
உன் பேச்சில்
அந்த கானம் பாடும் குயிலின் இசையே தோற்கும்.
அந்த கன்றின் எக்கரணமும்,
மான் குட்டியின் துள்ளலும்,
சின்னக் கண்ணு நீ போடும் ஆட்டத்தில்
மறைந்துதானே போகும்.
உன் பிறப்பால் நான் மகிழ்ந்தேன்,
உன் செயலால் நான் சிலையானேன்,
என்னை ஆட்டுவிக்கும் என் கண்ணே
உன் வாழ்வில் தானே என் மூச்சிருக்கும்.
==============
வீரா
No comments:
Post a Comment