மதுரமல்லிப் பூச்சரமே
நீ தேன் கிண்ண பாய்ச்சுரமோ,
உன்னை தென்றல் வந்து தீண்டையில
தூறல் வந்து நனைந்தாயோ
தீங்கிழைக்கும் விஷ வண்டுகளோ
உன்னை தீண்ட மனமின்றி
ஏக்கமாய் பார்த்து தேன் எடுக்க யோசித்ததோ!
மல்லி அழகோ,
அட நீ தான் பேரழகோ
அதை சூடியிருக்கையில
நீதான் இங்கே பெண்ணழகோ!
உன் பக்கம் செல்ல
என்னை இழந்து சென்றேனோ,
அதுதான் உன் வசிகரமோ,
இல்லை இல்லை நீ சூடிய
மதுர மல்லி தான் என்னை கிரங்கடித்ததோ!
அழகின் அழகே,
பிரம்மன் படைத்த தாரகையே,
என் மனதை ஆட்கொண்டாய் நீயோ,
அதற்கு காரணம் நீ சூடிய மலரோ!
கண்டாங்கி கட்டிய சிங்காரியே,
உன் இடுப்பு மடிப்புல
நான் சொக்க காரணம்
உன் சேலையோ,
இல்லை உன் இடை அழகோ!
என்னை ஆட்கொண்டது எதுவோ
அறியேன் நானோ,
என்னை வீழ்த்திவிட்டாய் நீயோ,
தஞ்சமடைந்தேன் உன்னில்
என்னை ஏற்றிடுவாய் மலரே!
No comments:
Post a Comment