Wednesday, 13 November 2019

செல்லக் குட்டிகளே

செல்லக் குட்டிகளே!
= = = = = = = = = = = = = =
செல்லக் குட்டிகளே,
சிங்காரக் கன்றுகளே,
உங்களை நம்பியே
உலகம் இருக்கிறது,
வீரமாய், தீரமாய் புறப்படுங்கள்!

இன்றைய குழந்தைகளே,
நீங்கள் நாட்டின் தூண்கள்,
பாரதத்தின் பிள்ளைகளே,
பணம் மட்டுமே குறிக்கோள் அல்ல,
தேசப் பக்தியே
முக்கியம் என உணருங்கள்!

உங்களை ஈன்ற தாய்
யார் என அடையாளப்படுத்திட
சாதிக்கப் புறப்படுங்கள்,
நீங்கள் பிறந்தது சுமையல்ல,
நாட்டின் சுவை
என்பதை உணர்த்துங்கள்!

லஞ்சத்தை அறுவடை செய்திட,
ஏழ்மையை வேர் அறுக்க,
பெண்களின் மான்பைப் போற்ற,
பண்பாட்டை வளர்த்தெடுக்க,
நாட்டைக் காக்க,
வீரமாம், விவேகமாய் வளருங்கள்!
= = = = =-=-========
வீரா

No comments:

Post a Comment