Monday, 11 November 2019

காற்றலையில் தவழ்ந்து வரும் கானமவள் தமிழழகு

காற்றலையில் தவழ்ந்து வரும் கானமவள் தமிழழகு
-------------------
இயற்றமிழால் எழிலானாள்,
இசைத் தமிழால் இசையானாள்,
இயலிசையால் காவியமானாள்,
முத்தமிழால் அழகானாள்,
என் தமிழன்னை!

அவள் வெறும் கானம் அல்ல!
காற்றலையில் தவழ்ந்து வரும் கானமவள்!
வாசிக்கும் போது இசையாய் பிறப்பெடுக்கும் தமிழழகு அவள்!

ஆயிரம் மொழிகள் பிறந்தாலும்
என் அன்னைத் தமிழே
மொழிகளுக்கெல்லாம் தாயானாள்,
உலக அறிவியலுக்கு
தன் புலவர் பிள்ளைகளைப் படைத்து
உயிர்ப்பு ஊட்டினாள்!

அன்பை ஊட்டி, அறிவை புகட்டி,
பட்டறிவை பெருக்கி,
மகானாக்கும் இறைவியான அவளுக்கு
ஈடு இணைதான் யாரோ!

தற்போதைய கண்டுபிடிப்புகளின்
அச்சாணி அவள்,
அவளின் மூலமே இன்றைய அறிவியல்,
கோவிலில் ஆயிரம் தெய்வங்கள் உண்டு,
அங்கே தமிழென்னும் என் அன்னைக்கே
முதல் மரியாதை!

என் அன்னையால் தான் நான்,
என் தொண்டு அவளுக்கு பணி செய்வதே!
அவளின் தமிழ் பாலை பருகி
கவிமாலையால் அலங்கரிப்பதே என் கடமை!
_____________
வீரா

No comments:

Post a Comment