Sunday, 17 November 2019

உயிரே உனக்காக ஒரு கவிதை

உயிரே உனக்காக ஒரு கவிதை
= = = = = = = = = = = = = = = = = =
உயிரே என்னை ஆட்கொண்ட நிலவே,
மலருடன், நிலவுடன், நதியுடன், மானுடன்,
தினம் தினம் அழகியலுடன் ஒப்பிடுகிறேன்,
கவிதையாய் வடிக்கின்றேன்.

உன் அழகுக்கு, ஒப்பீடுகள் கிடைக்காமல்,
வார்த்தைகள் சேராமல் திணறுகிறேன்.
கடவுளை கூட கண்டு விடலாம்,
உன் அழகை முழுமையாக ஆராதிக்க முடியாமல் அல்லல்படுகிறேன்.

உன்னில் நான் பதிந்தும்,
என்னுள் நீ கடந்தும்,
சகிக்காமல் உன்னை வர்ணிக்க
என் காதல் வளர்கிறது!

உனக்காக எழுதிய கவிதைகள்
காகித மடிப்பில் கரைகிறது,
என்னுள் நிறையவில்லை,
உனக்காக ஒரு கவிதை வடிக்கிறேன்,
மனம் மகிழவில்லை.

உன் நிழல் படமே கவிதையாக,
என் வார்த்தைகளும், வர்ணனைகளும்,
ஒப்பீடுகளும் நிஜமாகவில்லை.
உன்னை பார்த்து கொண்டேயிருந்தால் கவிதையாகிவிடுகிறாய்!
- - - - - - - - - - - - - - - - - -
வீரா

No comments:

Post a Comment