புன்னகை பூக்கள்
--------------------------------
பளிச்சென மலர்ந்திடும்
மலர்கள் அழகு,
பச்சை குழந்தையின்
மழலை புன்னகை பேரழகு,
தாயை கண்ட மகிழ்ச்சியில்
மழை நீரை கண்ட பயிர்களின்
புன்னகை அழகு,
அதனினும்,
ஏழை குழந்தைக்கு அன்னம் அளிக்கையில்
முகத்தில் பளிச்சிடும் புன்னகை பேரழகு
வெற்றி வந்து சேர்ந்திடும் தருணத்தில் உதிக்கும் புன்னகை அழகு,
வெற்றியை குருவுக்கு
சமர்பிப்பதோ பேரழகு,
அடுப்படி பெண்கள்
வெளி உலகிற்கு வந்தது அழகு,
அதனினும் அவர்களின்
சாதனையோ பேரழகு,
இடர்கள் தொடர்வதை
கடப்பது அழகு,
அந்த தொடரை
அடைப்பதோ பேரழகு,
துன்பத்தில் உழன்றாலும்
மனம் தெளிவாய் இருப்பது அழகு,
அதிலும் முகத்தில்
புன்னகை மலர்வது பேரழகு!
-----------------
வீரா
No comments:
Post a Comment