Tuesday, 12 November 2019

ஒடியல் கூழ் வாசமடி (கிராமியம்)

ஒடியல் கூழ் வாசமடி,
பனை ஓலையில் சிந்த சிந்த குடிக்கும் போது ருசியோ கூடுதடி,
ஆத்தா உன் கைப்பக்குவத்தில்
கூழ் கூட அமிர்தமானதடி,

அம்மியில் அரைத்த ஊருகாய் மணக்க
கம்மங் கூழும்,
கேழ்வரகு களி கிண்டியும்,
மிளகு, சோம்பு மணக்க
முருங்கை கூட்டும் வைத்து
நீ ஊட்டி விடும் ரசனையில்
ஆத்தா நாவில் தேனாய் ஊறுதடி,

ஆத்தா நீயும் இருக்கும் வரை,
கழுநீரை உண்டு கிட்டு
எனக்கு கூழாய் ஆக்கி போட்டு
என் தேகத்த தேத்துறியே,

உன் தேகம் மெலிந்து,
தோள்கள் சுருங்கி,
எலும்புகள் தோளுடன் ஒட்டி,
என்னை ஊட்டி, வளர்க்கும்
தாயுள்ளம் என்னை தாங்குதடி,

தாயன்பு என்னை தாங்கையில்
அந்த கூழின் சுவையில்
நான் உனக்கு தங்கம் ஆனேனடி,
என் தாயத்தான் பிரித்திடாதே,
பிரிவே என்னை கொல்லுமடி!
_______________
வீரா

No comments:

Post a Comment