மெல்லினமே நீயும் வல்லினமாய் மாறிவிடு
= = = = = = = = = = = = =
அடுப்பூதி வெளியில் வந்தாய்.
குடும்பம் உன்னை ஏற்க மறுத்தது,
போராடி சாதனைகள் படைத்தாய்,
உலகமே எதிர்த்து நின்றது!
பெண்ணாய் பிறந்ததாலே
இன்னல்கள் பல பிறந்தது,
அழகும், உடலும்
காமுகர்களின் பசிக்கு இரையாகிறது!
பெற்றெடுத்த தகப்பனால் ஒரு பக்கம்,
உடன் பிறந்தவனால் மறு பக்கம்,
ஆண் வர்க்கத்தின் பார்வையே உன் பக்கம்,
எந்த பக்கத்திலும் காமத்தின் கொடூரம்
அது பின் தொடர்ந்து படரும்!
நீ மெல்லினமாய் இருந்தது போதும்,
வல்லினமாய் மாறிட வேண்டும்,
கயவர்களின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும்,
விதியை மதியால் வென்றிட வேண்டும்.
சட்டம் உன் பக்கம் இருக்க
நீ சரித்திரம் படைத்திட வேண்டும்.
சாதிக்க பெண்மை தடையில்லை
என்பதை நீ உணர்ந்திட வேண்டும்.
நீ கடக்கும் பாதை கரடு முரடு,
அதை கடக்கும் உன் திறமையால்,
இச்சமுகம் உன்னை கடந்து வரும்,
அதற்கு நீ தான் கோடு போட வேண்டும்!
- - - - - - - - - - - - - - -
வீரா
No comments:
Post a Comment