Thursday, 7 November 2019

வாய்ப்பு

போராட்டமே வாழ்க்கை
அதில் முத்தெடுப்பதே தனி சுவை!
வறட்சியில் விதை தூங்கும்,
ஒரு துளி தண்ணீரில் முளைத்து உயிர்த்தெழும்!

எத்தனை சோதனைகள்
அம்பாக தாக்கினாலும்,
வாய்ப்பு வரும் போது
அம்புகள் தெறித்து விழும்!
அந்த வாய்ப்பை தேடாதே,
நீயே உருவாக்கு,
வானமும் உன் வசப்படும்!
------------------
வீரா

No comments:

Post a Comment