Tuesday, 5 November 2019

நீ விழித்தெழு மானிடா

தூங்கும் மானிடா
நீ விழிப்பது எப்போது,

நேற்று நீட்டுக்கு அனிதா,
பேனருக்கு சுபஸ்ரீ,

இன்று ஆழ்துளை கிணற்றுக்கு சுர்ஜித்,
நாளை எதற்கு யாரடா,

ஒவ்வொரு உயிர் பிரியும் போது
கவலையடையும் மானிடா
நீ களங்குவதால் பயன் ஏதடா,

உனக்கு ஒன்றை உணர்த்த
நீ விழிக்க
உனக்கு ஒரு சம்பவம் தேவையா,
அதற்கு உயிர் பலி தான் தீர்வா,
சிந்திப்பாயடா மனிதா

அன்று அனிதாவால்  கண்ணீர் வடித்தாய்,
நேற்று சுபஸ்ரீயை பற்றி வட்ட மேஜையில் பேசினாய்,
இன்று சுர்ஜித்தால் கதறுகிறாய்,
நாளை என்ன செய்வாய் மானிடா

அன்று அன்று நடக்கும் சம்பவம்,
உயிர் பலிகள்
நீ விழிப்பதற்கான திறவுகோளடா,
அதை கடந்து
அடுத்த சம்பவத்திற்கு மாறும் உன் மனம் என்ன மந்தியின் மனமா,
இல்லை மூடனின் குணமா.

தினம் தினம் நடக்கும் நிகழ்வுகள்
உனக்கு ஒரு சாபக்கேடா,
அதனை விவாதிக்கும் உன் திறமை
வெட்க கேடடா,

நேரலை என்ற பெயரின்
எத்தனை உள்ளங்களை கலங்கடித்தாய்,
இன்றுடன் அதனை மூட்டை கட்டினாய்,
நாளை நடக்கும் சம்பவத்திற்கு
நீ தாவி விட்டாய்

எனக்கு நடந்தால் உனக்கு செய்தி
உனக்கு நடந்தால் தான் வலியும், வேதனையும் தெரியுமடா,
அது வரை தர்மயுத்தமே நடந்தாலும்,
ஆட்சியே மாறினாலும்
மா மனிதா உன்னை திருத்துவது வீணடா
விழித்துக் கொள் மானிடா,

ஒரு சம்பவம் நடந்தால்
அதற்கு தீர்வு காண முயலடா,
தீர்வு இல்லாத வாழ்வு
பூஜ்யம் இல்லா கணக்கிற்கு சமம்.

உனது மூளைக்கு வேலையிருக்க
மீம்ஸ் உருவாக்கும் நல்ல திறமையிருக்க,
நீ வாட்சப், பேஸ்புக் நோன்டியது போதும்,
உமது நேரத்தை செலவிட
சமுக பணிக்கு திரும்படா!

No comments:

Post a Comment