அன்பே சுவாசம் :
=============
அன்னை என்ற மூன்றெழுத்தில்
அன்பு என்ற மூச்சிறுக்கும்,
அதிலே குழந்தையின் சுவாசம் இருக்கும்,
அன்பின் பிறப்பிடம்,
அம்மாவின் உறவாக இருக்கும்
அன்பு பிறழும் போது அடிதடி பிறக்கும்,
ஆத்திரம் பெருகும் போது ஆணவம் தாண்டவமாடும்,
அறிவு கலங்கி போகும்,
மனிதம் மறைந்து போகும்,
அன்பு சுவாசத்தில் கலந்தால் போதும்,
அறிவு உலகை ஆளும் ,
எதிரிகளை எளிதில் கையாளும்,
துரோகிகளை காணாமல் செய்யும்
இந்த மாயம் செய்யும் அன்பை
பிறக்க செய்யும் உறவை
ஆத்திரத்தால் இழந்திட வேண்டாம்,
வன் சொற்களால் காயத்தை ஏற்படுத்திட வேண்டாம்,
கொடிய மிருகமும் அன்பினால் அடி பணியும்,
எளிய விலங்கினமும் முத்தமிடும்,
அன்பிற்கு அடிபணியாத உயிர்கள் இல்லை,
அதன் சுவாசம் பறவாத இடமும் இல்லை!
= = = = = = = =
வீரா
No comments:
Post a Comment