Monday, 11 November 2019

ஆத்துமேட்டுல அவள் யாரோ (கிராமியம்)

ஆத்துமேட்டுல அவள் யாரோ
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஆத்துமேட்டுல அவள் யாரோ
என் கண்ணத்தை தடவி சென்றவளோ,
கண்டாங்கி கட்டிய கன்னியோ,
என் மனதை மயக்கிய மல்லியோ!

ஆடு மேய்க்கையில் அழகாய் வந்தவளோ,
ஆவாரம் பூவாய் பூத்து சிரித்தவளோ,
ஆணியாய் மனதில் பதிந்தவளோ,
என்னை கொள்ளை கொண்ட கொண்டையழகியோ!

காந்தமாய் கவர்ந்த கண்ணழகியோ
மலர்களை தொடுக்கும் பேரழகியோ,
இடையை குலுக்கும் இடையழகியோ,
நெஞ்சத்தை அள்ளும் மார்பழகியோ!

மாந்தரை கவரும் தாமரையோ,
தேவரை மயக்கும் தேவியோ,
கந்தர்வரை கவரும் சுந்தரியோ,
பிரம்மன் படைப்பின் பேரழகோ!

கனவில் குடையும் அவள் மாதவியோ,
நினைவில் வாடும் நித்திரையும் அவளோ,
தேனிக்கள் நாடும் தேன் அவளோ,
வண்டுகளை கவரும் வாசமுள்ள மலரவளோ!

நான் தேடும் தேவகி அவளோ,
என்னை கவரும் கல்யாணி நீயோ,
நான் வர்ணிக்கும் நிலவும் அவளோ,
ஆத்து மேட்டுல நிற்கும் அவளோ,
என் காதலும் தானோ!
- - - - - - - - - - - -
வீரா

No comments:

Post a Comment