வயலும் வசந்தமும்:
ஆற்றங்கரை ஓரத்தில்
அரை வீசம் வயலிருக்க
மழை பொழியவில்லை,
ஊற்று மட்டும் இருக்குதைய்யா!
ஊற்று தண்ணீரில்
ஏர் ஓட்டி, சேரடித்து,
நாற்று விட்டு நடவு நட்டு
பச்சை பிடித்திருக்க
வசந்தம் தான் வந்ததைய்யா!
செயற்கை
நினைப்பு தான்
பிழைப்பை கெடுக்கும் என்று,
வந்ததது புது நோய், நொடி,
அதுக்கு மருந்தும் இங்கே இல்லைய்யா!
பாட்டன், முப்பாட்டன் செய்த
விவசாயத்தை நான் நினைத்தேன்,
வேப்பம் புண்ணாக்கு,
மணலோட கலந்து
தூவி விட்டேன்.
இயற்கை மகத்துவத்தால்,
வந்த நோய் நொடி மாயமாக
என் வயலுக்கு
வசந்தம் வந்ததய்யா!
காற்று மழை வந்ததிங்கே,
வெள்ளாமை நெருங்கையில்
வெள்ளம் வந்தால் என்ன செய்வேன்,
அந்த தெய்வம் துணையிருக்க,
வெள்ளாமை விளைந்திட,
என் வயிறு நிறைந்திட,
என் வாழ்வும் வசந்தமானதய்யா!
------------
வீரா
No comments:
Post a Comment