Tuesday, 12 November 2019

உழவுக்கு கைகொடு

உழவுக்கு கைகொடு,
உழைப்புக்கு உறுதி கொடு,
உழவனுக்கு உயிர் கொடு,
உனக்கும் உணவு கிடைக்கும்!

எத்தனை தொழில்கள் உண்டு நாட்டிலே,
அதிலே உழவுக்கே பெருமை இந்த தேசத்திலே,
பின்பு ஏன் இந்த பாகுபாடு ஏட்டிலே,
உழவை மதிக்காத மிருகமாய் காட்டிலே,
நீ சுற்றி திரிவதா  பாட்டிலே!

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திடவே,
தேவை உழவன் நாட்டிற்கே,
உழவுதானே நமக்கு முதுகெலும்பு,
பின்பு ஏதற்கு இந்த வெற்று கூச்சல்,

உழவு தொழிலுக்கு வேண்டும் முன்னுரிமை,
மகசூலுக்கு வேண்டும் நல்ல விலை,
உழவன் கணக்கு பார்த்தால்,
கை நிறைய பணம் மிச்சமாக,
கை கொடுப்போம் உழவுக்கு!
- - - - - - - - - - - -
வீரா

No comments:

Post a Comment