Tuesday, 13 March 2018

அன்புக்கு சாதி தடையில்லை

அன்புக்கு சாதி தடையில்லை
மதமும் தேவையில்லை
மொழியும் வேண்டாம்
நல்ல மனம் போதும்

மனதில் வஞ்சகம் வேண்டாம்
சூழ்ச்சிகள் எண்ணிட வேண்டாம்
பொறுமை குணம் வேண்டும்
புரிதல் மட்டும் இருந்தால் போதும்

பரிசுத்த அன்புக்கு
பாம்புக் கூட நட்பு கொள்ளும்
வாத்திடம் குழந்தை காட்டிடும் அன்பு
நட்புக்கு இலக்கணம்
இலக்கியம் பேசிடும் மனிதா
இந் நட்பை  நீயும்
மனதில் கொள்ளடா!
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா

No comments:

Post a Comment