நேரெதிர்
- - - - - - - - - - - - - - -
அடைப்பட்ட கூண்டுக் கிளி
ஏக்கத்தில் பார்க்கிறது
சிறகை விரிக்கும்
சுதந்திரக் கிளியை!
கூண்டிற்குள் உணவும் உண்டு
தண்ணீரும் உண்டு
ஆறுதல் சொல்ல ஆதரவும் இல்லை
கொஞ்சி பேசிட குழந்தைகள் இல்லை
தனிமையில் சுழலும் வாழ்க்கை சக்கரம்
ஆயுள் முழுதும் பாதுகாப்பு கவசம்!
சுதந்திரக் கிளியோ
தேடி உணவு உண்டு
உறவுகளைக் கண்டு மகிழ்ந்து
குழந்தைகளை கொஞ்சி
இலைமறைவாய் வாழ்கிறது
வேடன் அம்பிற்கு பயந்து
- - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
No comments:
Post a Comment