வார்த்தையால் வதைத்தாய்
------------------------------------------
வண்ணமுகில் கண்ணழகியே
மயில் தோகை கூந்தலழகியே
செவ்விதழ் உதட்டழகியே
முத்து முத்து பல்லழகியே
அக்கம் பக்கம் நின்றேன்
மாறி மாறிப் பார்த்தேன்
திசையெல்லாம் நோக்கினேன்
சீவி சிங்காரித்து வந்த என் கவியே
பின் தொடர்கிறேன் என்றாய்
வசைப்பாடினாய்
வார்த்தையால் வதைத்தாய்
பேச்சினால் சிறையில் தள்ளினாய்
தூயக் காதலை அறியா நீ
உண்மை அன்பை
புறக்கணித்தாய்
வார்த்தையால் கொன்றுவிட்டாய்
உன் நினைவில்
நான் உயிரற்ற சதையானேன்
-----------------
அன்புடன் வீரா
No comments:
Post a Comment