Tuesday, 13 March 2018

கவிச்சோலை

கவிச்சோலை
- - - - - - - - - - - - - - -
கடலின் குழந்தையே
அலைகள் உனக்கு ஊஞ்சல்
பேரலைகள் உனக்கு தாலாட்டு
ஓடங்கள் உமக்கு விளையாட்டுப் பொருள்

உம்மை கண்ட மனிதர்களோ
மெய் மறந்து போவார்களே
உங்கள் கொஞ்சும் விளையாட்டுக்கள்
ரசனையைத் தூண்டும்

துள்ளி விளையாடுகையில்
பள்ளி குழந்தைகளாய்
மீனவர்களின் தோழனாய்
அவைகள் வழிக்காட்டும் வந்தனமாம்
--------------------------------------
அன்புடன்
வீரா


No comments:

Post a Comment