என்னை மறந்ததேனோ
- - - - - - - - - - - - - - - - - - - - - -
காட்டிலே மேட்டிலே
கழனியில் தண்ணீர் இறைத்து
வயிர் வாடி சுடு தண்ணீர் குடித்து
பசி மறுத்துப் போக,
தினையறுத்து வந்து
மலைத் தேனில் குழப்பி
உன் பசியாற்றிய என்னை
நீயும் மறந்ததேனோ!
கொசுக்கடியில் கொஞ்சி விளையாட
உன் மீது என் மாராப்பு போர்த்தி
நீ நிம்மதியாய் உறங்கிட
இரவு பொழுது கண் விழித்து
உன்னை காக்க
அவள் உறக்கம் கெடுத்து
உடல் வருந்தி வெந்த என்னை
நீயும் மறந்ததேனோ!
கண்ணீரே வாழ்க்கையாக
தண்ணீரே உணவாக
உன் நினைப்பே என் நினைவாக
உன் ஆயுளே என்உயிராக
உண்ண உணவின்றி
பத்து பாத்திரம் தேய்த்து
உன் வயிற்றை நிரப்பிய
என்னை ஏன் மறந்தாய் மகனே!
- - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
No comments:
Post a Comment